இயக்குனர் விஜய் விரைவில் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்.

vijay

அஜித் நடிப்பில் வெளியான கிரீடம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் ஏ.எல். விஜய். பொய் சொல்லப் போறோம், மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள், தலைவா, தாண்டவம், சைவம், தேவி, வனமகன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். இவர் தயாரிப்பாளர் ஏ.எல். அழகப்பனின் மகன் ஆவார்.

Advertisment

தெய்வத் திருமகள் படத்தில் அமலா பால் இவர் இயக்கத்தில் நடித்திருந்தார். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. இதனையடுத்து நீண்ட நாட்களாக இந்த விஷயம் சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது. பின்னர் 2014ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் தேதி சென்னையில் திருமணம் நடைபெற்றது.

Advertisment

ஆனால், இந்த திருமண உறவி நீடிக்கவில்லை, இரண்டு வருடங்கள் கழித்து 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் இருவரும் பிரிவதாக அறிவித்தனர். 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் விவாகரத்து பெற்றனர்.

இந்நிலையில், இயக்குநர் விஜய் இரண்டாவது திருமணம் செய்துக்கொள்ள முன்வந்துள்ளார். ஐஸ்வர்யா என்கிறா மருத்துவரை திருமணம் செய்துகொள்கிறார். இவர்களுடைய திருமணம், அடுத்த மாதம் 11ஆம் தேதி நடைபெறுகிறது.

Advertisment