/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vetrimaran_5.jpg)
இயக்குநர்பா ரஞ்சித் நீலம் புரொடக்சன் சார்பில் ரைட்டர் படத்தை தயாரித்துள்ளார். அறிமுக இயக்குநர்பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கும்இப்படத்தில் நடிகர் சமுத்திரக்கனி கதாநாயகனாக நடித்துள்ளார். திலீபன், இனியா, சுப்ரமணிய சிவா ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமுத்திரக்கனி இப்படத்தின்போலீசாக நடித்துள்ளார்.ஒரு நேர்மையான போலீசுக்கு சமூகத்திலும் தனது அலுவலகத்திலும் ஏற்படும் பிரச்சனைகளை இப்படம் பேசியுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர்ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் ரைட்டர் படத்தின் சிறப்புக் காட்சி நேற்று திரையிடப்பட்டது. இதில் இயக்குநர்கள்சசிகுமார், வெற்றிமாறன், மாரி செல்வராஜ் உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் கலந்து கொண்டு ரைட்டர் படத்தை பார்த்தனர். இதையடுத்துசெய்தியாளர்களை சந்தித்த இயக்குநர்வெற்றிமாறன்," ரைட்டர் ஒரு அழுத்தமான திரைப்படம். நீண்ட நாட்களாக விவாதிக்க கூடிய, யாரும் பேசாமல்இருந்த விஷயத்தை ரைட்டர் திரைப்படம் பேசியுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
இப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வரும் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)