/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/18_44.jpg)
திரைப்பட பாடலாசிரியர், கவிஞர் கபிலன் மகள் தூரிகை, நேற்று அவரது வீட்டில் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூரிகையின் மரணம் குறித்து சரியான காரணம் இன்னும் வெளியாகவில்லை. மேலும் முதல்கட்டமாக காவல்துறையினர் தூரிகையின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்நிலையில் இயக்குநர் வசந்தபாலன் தூரிகையின் மரணம் குறித்து தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவர்வெளியிட்டுள்ள பதிவில், "என் இயக்கத்தில் தயாராகிக் கொண்டிருக்கும் அநீதி திரைப்படத்தில் ஆடை வடிவமைப்பாளராக தூரிகை கபிலன் வேலை செய்தார். செய்தி கேட்டு இரவெல்லாம் மனதிற்குள் ஆந்தைகள் கத்தின.வாழ்வு ஏன் இத்தனை துயரத்தைத் தருகிறது." என வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார். வசந்தபாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன் நடிப்பில் உருவாகி வரும் 'அநீதி' படத்தில் தூரிகை கபிலன்ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே தூரிகை, ஆடை வடிவமைப்பாளராக மட்டுமில்லாமல் எழுத்தாளராகவும் இருந்துள்ளார். அந்த வகையில் சில வருடங்களுக்கு முன்பு ஒரு ஆங்கில முன்னணி ஊடகத்தில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வந்தார். மேலும் கடந்த 2020-ஆம் ஆண்டு 'பீயிங் வுமன் மேகசின்' (Being Women Magazine) என்னும் டிஜிட்டல் இதழை தொடங்கி, அதனை வழி நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)