Advertisment

விஷால் பெயரை சொல்லி லட்சக்கணக்கில் மோசடி... சன்னி லியோன் பட இயக்குனர் மீது புகார்...

சென்னையிலுள்ள விருகம்பாகத்தைச் சேர்ந்தவர் நரேஷ் கோத்தாரி. இவர் சினிமா தயாரிப்பாளராக உள்ளார். இவரிடம் தமிழ் சினிமாவில் இயக்குனராக இருக்கும் வடிவுடையான், கடந்த 2016ஆம் ஆண்டு விஷாலை வைத்து ரூ. 7 கோடி பட்ஜெட்டில் படம் எடுக்க உள்ளதாகவும், அதற்காக விஷால் கால்ஷீட் பெற்றுள்ளதாகவும் நரேஷிடம் ஆவணங்களை காட்டியுள்ளார்.

Advertisment

vishal

கால்ஷீட் இவர் பெற்றிருக்கிறார் என்பதை நம்பி நரேஷ் கோத்தாரி வடிவுடையானிடம் 3 தவணைகளாக ரூ. 47 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால், வடிவுடையான் சொன்னபடி படம் எடுக்கவில்லை, வாங்கிய பணத்தையும் திரும்பி தரவில்லை. இதனை அடுத்து சந்தேகமடைந்த நரேஷ் விஷால் தரப்பிடம் இதுகுறித்து கேட்டதற்கு அது போன்ற எந்த கால்ஷீட்டும் வடிவுடையானுக்கு வழங்கவில்லை என தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த நரேஷ் கோத்தாரி வடிவுடையான் தன்னை மோசடி செய்துவிட்டதாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

இயக்குனர் வடிவுடையான் ஏற்கெனவே பொட்டு, சௌகார்பேட்டை, தம்பி வெட்டோத்தி சுந்தரம் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். தற்போது சன்னி லியோனை வைத்து வீரமாதேவி என்றொரு வரலாற்று படத்தை இரண்டு வருடங்களாக இயக்கி வருகிறார்.

vishal
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe