Advertisment

இது ஒரு அற்புதமான அனுபவம்; இளையராஜா சாருக்கு நன்றி - இயக்குநர் பிரியா பேச்சு

director v priya thanks ilaiyaraaja

Advertisment

கண்ட நாள்முதல், கண்ணாமூச்சி ஏனடா ஆகிய ஆகிய படங்களைஇயக்கிய பிரியா தற்போது நடிகர் பிரகாஷ் ராஜ் நடிக்கும் வெப் தொடரைஇயக்கவுள்ளார். ஆனந்தம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த தொடரின் முக்கிய கதாபாத்திரங்களில்அரவிந்த் சுந்தர், சம்பத், விவேக் பிரசன்னா, வினோத் கிஷன், மற்றும் ஜான் விஜய், விவேக் ராஜ்கோபால், இந்திரஜா, சம்யுக்தா, அஞ்சலி ராவ் மற்றும் மிர்னா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர்.விரைவில் வெளியாகவுள்ள இந்த வெப் தொடரின் பத்திரிகையாளர்களின் சந்திப்பு நேற்று நடைபெற்றது.

இதில் பேசிய இயக்குநர் பிரியா, "வனவாசம் முடித்து மிக நீண்ட இடைவேளைக்கு பிறகு உங்களை சந்திக்கிறேன். முரளி சார், கௌசிக் இருவருக்கும் நன்றி. கண்ட நாள் முதல் படத்தில் இருந்தது போல் ஒரு சிறு நம்பிக்கையில் தான் இதை தொடங்கினேன். எல்லோரும் இதில் அதே நம்பிக்கையோடு உழைத்துள்ளார்கள். பிரகாஷ் ராஜ் சாருக்கு என் வாழ்க்கையில் முக்கிய இடமுண்டு; எனக்கு வாய்ப்பு கொடுத்தவர். அவரை தவிர இந்த ரோலை யாரும் செய்ய முடியாது. ஜான் விஜய், சம்பத் என அனைவரும் அட்டகாசமாக நடித்துள்ளார்கள். இதில் எட்டு அத்தியாயத்திலும் தனித்தனி கதை இருக்கும், அதே நேரத்தில் பின்னணியில் ஒரு ஹைப்பர்லிங்க் தொடர்பு இருக்கும். இது ஒரு அற்புதமான அனுபவம். இளையராஜா சாருக்கு நன்றி அவருக்கு அவரது இசைக்கு ஒரு தொடரை அர்ப்பணித்துள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்.

Ilaiyaraaja web series
இதையும் படியுங்கள்
Subscribe