Director Trivikram Srinivas After Rajinikanth, Samantha has an equal fanbase

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சமந்தா, கடைசியாக விஜய் தேவரக்கொண்டாவுடன் இணைந்து குஷி படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டதால் அதற்காக சிகிச்சை பெற்று வருகிறார். இப்போது கைவசம் 'சிட்டாடெல்' வெப் தொடர் வைத்துள்ளார். இதன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அலியா பட் நடிப்பில் வருகிற 11ஆம் தேதி வெளியாகவுள்ள ‘ஜிக்ரா’ படத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இதில் தெலுங்கு இயக்குநர் திரி விக்ரமும் கலந்து கொண்ட நிலையில் ரஜினிகாந்த் அளவிற்கு சமந்தாவிற்கு ரசிகர்கள் இருப்பதாக பேசியுள்ளார். அவர் பேசியதாவது, “தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ரஜினிகாந்துக்கு அடுத்தபடியாக அவருக்கு இணையான ரசிகர்கள் சமந்தாவுக்கு இருப்பதாக நினைக்கிறேன். இதை சமந்தா மீதான அன்பினால் சொல்லவில்லை. முழு மனதுடன் சொல்கிறேன். நீங்கள் சம்மதித்தால் உங்களுக்காக கதாபாத்திரம் வடிவமைக்க தயாராக இருக்கிறேன்” என்றார். இவர் அடுத்ததாக அல்லு அர்ஜூனை வைத்து இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Director Trivikram Srinivas After Rajinikanth, Samantha has an equal fanbase

Advertisment

இதே விழாவில் சமந்தா குறித்து ஆலியா பட் பேசுகையில், “நீங்கள் ஆஃப் ஸ்கிரீனிலும் ஆன் ஸ்கிரீனிலும் ஹீரோ. உங்களுடைய திறமையையும் வலிமையையும் நான் மதிக்கிறேன். ஒரு ஆணாதிக்க சமூகத்தில் பெண்ணாக இருப்பது ஈஸியான விஷயம் அல்ல. ஆனால் அதை தாண்டி நீங்கள் உயர்ந்து நிற்கிறீர்கள். நீங்கள் மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு” என்றார்.