Advertisment

"இதை எப்படி எடுக்க முடியும் என பயமாக இருந்தது" - இயக்குநர் திரு

director thiru speech at jhansi web series press meet

Advertisment

நடிகர் கிருஷ்ணா தயாரிப்பில், நடிகை அஞ்சலி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இணையதொடர் 'ஜான்ஸி'. திரு இயக்கியுள்ள இந்தத்தொடரில் சாந்தினி சௌத்திரி, ராஜ் அர்ஜுன், ஆதர்ஷ் பாலகிருஷ்ணா உள்ளிட்ட பலர் முக்கியகதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மொத்தம் 10 எபிசோடுகளாக உருவாகியுள்ள இந்தத்தொடர் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இன்று (27.10.2022) வெளியாகியுள்ளது. இதனை முன்னிட்டு படக்குழுவினர்செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது நடிகர் கிருஷ்ணா பேசுகையில், "இந்த வருடம் எனக்கு படம் எதுவும் வரவில்லை என்பதால் உங்களை சந்திக்க முடியவில்லை. ஆனால் அடுத்ததாக‘பெல் பாட்டம்’வருகிறது. எனக்கு தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிக்க வேண்டும் என்பது கனவு. இது எங்கள் நிறுவனத்தின் மூன்றாவது படைப்பு. அஞ்சலி போன்ற திறமையான நடிகர்களை பல மொழிகளிலும் இருந்து கூட்டி வந்திருக்கிறோம். நான் இதில் நடிக்கவில்லை எனக்கு எதாவது கொடுங்க எனக் கேட்டேன். ஆனால் கடைசி வரை தரவில்லை. இந்தத்தொடர் மிக நன்றாக வந்துள்ளது" என்றார்.

இயக்குநர் திரு பேசுகையில், "கிருஷ்ணா என்னிடம் போன் செய்து இந்தக் கதை பற்றி சொன்னார். முதலில் வெப் சீரிஸாக எடுக்க நிறைய தயக்கம் இருந்தது. இதை எப்படி எடுக்க முடியும் என பயமாக இருந்தது. மிகப்பெரிய ஸ்கேலில் எடுக்க வேண்டிய கதை. எல்லோரும் சேர்ந்து குறிப்பிட்ட பட்ஜெட்டில் 10 எபிசோடில் எடுத்துள்ளோம். இதில் மிகப்பெரிய ப்ளஸ் திரைக்கதை. மிக அட்டகாசமாக எழுதியிருந்தார்கள் பார்க்கும்போது உங்களுக்குத்தெரியும். கிருஷ்ணாவுடன் நடிகராக அவரை இயக்கி வேலை பார்ப்பேன் என நினைத்தேன் ஆனால் அவர் தயாரிப்பாளராக இருக்கும் படைப்பில் வேலை பார்த்திருக்கிறேன். இந்தப் படைப்பு கண்டிப்பாக உங்களை ஆச்சரியப்படுத்தும்" என்றார்.

Anjali Actor krishna
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe