Skip to main content

"இதை எப்படி எடுக்க முடியும் என பயமாக இருந்தது" - இயக்குநர் திரு

Published on 27/10/2022 | Edited on 27/10/2022

 

director thiru speech at jhansi web series press meet

 

நடிகர் கிருஷ்ணா தயாரிப்பில், நடிகை அஞ்சலி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இணைய தொடர் 'ஜான்ஸி'. திரு இயக்கியுள்ள இந்தத் தொடரில்  சாந்தினி சௌத்திரி, ராஜ் அர்ஜுன், ஆதர்ஷ் பாலகிருஷ்ணா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மொத்தம் 10 எபிசோடுகளாக உருவாகியுள்ள இந்தத் தொடர் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இன்று (27.10.2022) வெளியாகியுள்ளது. இதனை முன்னிட்டு படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். 

 

அப்போது நடிகர் கிருஷ்ணா பேசுகையில், "இந்த வருடம் எனக்கு படம் எதுவும் வரவில்லை என்பதால் உங்களை சந்திக்க முடியவில்லை. ஆனால் அடுத்ததாக ‘பெல் பாட்டம்’ வருகிறது. எனக்கு தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிக்க வேண்டும் என்பது கனவு. இது எங்கள் நிறுவனத்தின் மூன்றாவது படைப்பு. அஞ்சலி போன்ற திறமையான நடிகர்களை பல மொழிகளிலும் இருந்து கூட்டி வந்திருக்கிறோம். நான் இதில் நடிக்கவில்லை எனக்கு எதாவது கொடுங்க எனக் கேட்டேன். ஆனால் கடைசி வரை தரவில்லை. இந்தத் தொடர் மிக நன்றாக வந்துள்ளது" என்றார். 

 

இயக்குநர் திரு பேசுகையில், "கிருஷ்ணா என்னிடம் போன் செய்து இந்தக் கதை பற்றி சொன்னார். முதலில் வெப் சீரிஸாக எடுக்க நிறைய தயக்கம் இருந்தது. இதை எப்படி எடுக்க முடியும் என பயமாக இருந்தது. மிகப்பெரிய ஸ்கேலில் எடுக்க வேண்டிய கதை. எல்லோரும் சேர்ந்து குறிப்பிட்ட பட்ஜெட்டில் 10 எபிசோடில் எடுத்துள்ளோம். இதில் மிகப்பெரிய ப்ளஸ் திரைக்கதை. மிக அட்டகாசமாக எழுதியிருந்தார்கள் பார்க்கும்போது உங்களுக்குத் தெரியும். கிருஷ்ணாவுடன் நடிகராக அவரை இயக்கி வேலை பார்ப்பேன் என நினைத்தேன் ஆனால் அவர் தயாரிப்பாளராக இருக்கும் படைப்பில் வேலை பார்த்திருக்கிறேன். இந்தப் படைப்பு கண்டிப்பாக உங்களை ஆச்சரியப்படுத்தும்" என்றார்.  

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“இது சீரியஸ் படம் அல்ல, பக்காவான கமர்சியல்” - ராம்

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
director ram about his Yezhu Kadal Yezhu Malai movie

இயக்குநர் ராம் 'பேரன்பு' படத்தைத் தொடர்ந்து, 'ஏழு கடல் ஏழு மலை' என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கியுள்ளார். இதில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி ஆகியோர் நடித்துள்ளனர். 'வி ஹவுஸ் ப்ரொடக்‌ஷன்' சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்திப்ன் கிளிம்ப்ஸ் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. 

இதையடுத்து நெதர்லாந்தில் நடைபெறும் ரோட்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழாவில் 'பிக் ஸ்க்ரீன் போட்டிப் பிரிவில்' திரையிட தேர்வாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன் படி கடந்த ஜனவரி 25 தேதி தொடங்கி வருகிற பிப்ரவரி 4 வரை நடைபெறுகிற 53வது ரோட்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழாவில், கடந்த 30ஆம் தேதி 'ஏழு கடல் ஏழு மலை' படம் திரையிடப்பட்டது. 

இதற்காக நெதர்லாந்து சென்றுள்ள படக்குழு, விழாவில் பங்கேற்றது. படம் திரையிட்ட பிறகு அது குறித்த அனுபவம் பகிர்ந்த சூரி, “இங்க உள்ள மக்கள் படங்களுக்கு நல்ல வரவேற்பு கொடுக்கிறாங்க. இந்த மாதிரி விழாவில் கலந்துகிட்ட பிறகு தான், நம்ம தமிழ் படத்துக்கு எவ்ளவு மரியாதை இருக்கு-ன்னு தெரியுது. கண்டிப்பா இந்தப் படம் உலகளவில் நல்ல பேரை வாங்கும்” என்றார்.    

பின்பு பேசிய ராம், “படத்திற்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கு. விழாக்களில் திரையிடுவதால் ரொம்ப சீரியஸ் படம்னு நினைச்சிடாதீங்க. உண்மையாகவே பக்காவான கமர்சியல் படம். கோடைகாலத்தில் இப்படம் திரையரங்கில் வெளியாகும்” என்றார். 

Next Story

“எனக்கு நானே போட்டி” - நடிகர் கிருஷ்ணா பேட்டி

Published on 11/07/2023 | Edited on 11/07/2023

 

Rayar Parambarai - Actor Krishna  Interview

 

நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக ‘ராயர் பரம்பரை’ படத்தின் குழுவினரைச் சந்தித்தோம். இயக்குநர் ராம்நாத், நடிகர் கிருஷ்ணா மற்றும் நடிகை சரண்யா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். படப்பிடிப்பில் நடந்த சுவாரசியமான விசயங்கள் மற்றும் நடித்த அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டனர்.

 

நடிகர் கிருஷ்ணா பேசியதாவது, “கதைக்கு முழுமையாகப் பொருந்தும் ஒரு டைட்டில் ராயர் பரம்பரை. படம் பார்த்த பிறகு அனைவருக்கும் இது புரியும். ஆனால் இது ஜாதி சம்பந்தப்பட்ட படமா என்று பலர் கேட்கின்றனர். என்னுடைய காமெடி படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. கதையும் கேரக்டரும் எனக்கு கனெக்ட் ஆனால் நிச்சயம் நான் நடிப்பேன். இருப்பதிலேயே கடினமான ஜானர் என்றால் அது காமெடி தான். புதுமுக இயக்குநர்களின் படங்களில் நடிக்கும்போது பிரஷர் அந்த இயக்குநர்களுக்குத் தான் அதிகம் இருக்கும். 

 

ஆடியன்ஸ் என்னிடம் குறிப்பிட்ட எதையும் எதிர்பார்க்காமல் இருப்பதுதான் என்னுடைய பலம். கழுகு, யாமிருக்க பயமேன் போன்ற படங்கள் மக்களுக்கும் எனக்கும் புதிதாக இருந்தது. கதைக்களம் புதிதாகவும் இருக்க வேண்டும், மக்கள் ரசிக்கும்படியும் இருக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன். என்னுடைய சமகால நடிகர்களுடன் நல்ல நட்பு இருப்பதால் போட்டி என்பதற்கே இடமில்லை. எனக்கு நானே தான் போட்டி. 

 

மைனா, ஆரண்ய காண்டம், மாரி போன்ற படங்களில் முதலில் நான் நடிக்க வேண்டியதாக இருந்தது. யாக்கை படத்திற்காக நான் உயிரைக் கொடுத்து நடித்தேன். ஆனால் அதற்கான வெற்றி கிடைக்கவில்லை என்பது வருத்தமாக இருந்தது. மனோபாலா சாரும் மனோகர் சாரும் இந்தப் படத்தில் நடித்தார்கள். ஆனால் படம் வெளியாகும்போது அவர்கள் உயிருடன் இல்லை என்பதை நம்பவே முடியவில்லை. ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர்களோடு எப்போதும் கலகலப்பாக இருக்கும். காமெடியை எதிர்பார்த்து வரும் மக்களை நிச்சயம் இந்தப் படம் திருப்திப்படுத்தும். முழுக்க முழுக்க காமெடியான படம் இது. நிறைய காதல் தோல்விகளைப் பார்த்துவிட்டதால் காதல் தோல்விப் பாடல்கள் எனக்கு நன்றாக செட்டாகின்றன என்று நினைக்கிறேன்.