Advertisment

"தனிமையில் தத்தளித்து ஒன்று சேர்ந்த பின், சொற்களுக்கு இடமேது" - தங்கர் பச்சன் நெகிழ்ச்சி   

director Thankar Bachan tweet about gangai amaran and ilaiyaraaja

Advertisment

இந்திய சினிமா துறையில் முன்னணி இசையமைப்பாளராகஇருக்கும் இளையராஜா மற்றும் அவரது சகோதரர் கங்கை அமரன் கூட்டணியில் வெளியான படங்கள் அனைத்துமே பெரிது பேசப்பட்டது.நடிகர், இயக்குநர், பாடகர், இசையமைப்பாளர் என பன்முக திறமை கொண்டவராகதிகழ்ந்த கங்கை அமரன் மற்றும் அவரது சகோதரர் இளையராஜா இருவருக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பல வருடங்களாக பேசிக்கொள்ளாமல் இருந்து வந்தனர். இதனை தொடர்ந்து பல வருடங்களுக்கு பிறகு கங்கை அமரன் தனது சகோதரர் இளையராஜாவை நேரில் சந்தித்து பேசியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாக நிலையில் ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில்இயக்குநர் தங்கர்பச்சான் இவர்கள்சந்திப்பு குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில்,"ஒரே வயிற்றில் பிறந்து,ஒன்றாகவே வளர்ந்து, இன்ப துன்பங்களை அனுபவித்து, காலம் ஏற்படுத்திய பிரிவில் கடந்த காலங்களை எண்ணி எண்ணி ஏக்கங்களோடு தனிமையில் தத்தளித்து ஒன்று சேர்ந்த பின் அங்கே சொற்களுக்கு இடமேது. இதனைக்கண்டு எனைப்போன்ற இலட்சக்கணக்கிலான அண்ணன் தம்பிகளும் நெகிழ்கின்றோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

thangar bachan gangai amaran Ilaiyaraaja
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe