Advertisment

பிரபல தமிழ் பட இயக்குநர் கரோனாவால் மரணம்!

cagvasv

கடந்த 2019ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவின் உகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ், கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவில் வேகமெடுக்கத் தொடங்கியது. அரசு விதித்த ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தொடர்ந்து, கரோனா பரவல் ஓரளவிற்குக் கட்டுக்குள் வந்தது. தற்போது உலக நாடுகள் முழுவதிலும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ள கரோனா இரண்டாம் அலை, கடந்த சில நாட்களாக இந்தியாவிலும் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் உட்பட பல்வேறு பிரபலங்களும் மீண்டும் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

Advertisment

gwrgwe

இந்நிலையில், சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான 'ஆண் தேவதை' பட இயக்குநர் தாமிரா, சமீபத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டார். இவர் சென்னை அசோக் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று (27.04.2021) காலை சிகிச்சை பலனின்றி காலமானார். இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய தாமிரா, 2010ஆம் ஆண்டு வெளியான ‘ரெட்டைச் சுழி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். 53 வயதான இயக்குநர் தாமிராவின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

director thamira corona 2nd wave samuthirakani
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe