Director Tamizh

விக்ரம் பிரபு, அஞ்சலி நாயர், லால், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'டாணாக்காரன்'. இப்படத்தை அறிமுக இயக்குநர் தமிழ் இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையமைக்க, எஸ்.ஆர் பிரபு தயாரித்துள்ளார். இப்படம் ஏப்ரல் 8ஆம் தேதி டிஸ்னி ஹாட் ஸ்டார் தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ள நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.

Advertisment

விழாவில் இயக்குநர் தமிழ் பேசுகையில், ”என்னுடைய படத்துக்கு இத்தனை ஆசீர்வாதங்கள் கிடைத்திருப்பது என்னை போன்ற இயக்குநருக்கு மிகவும் பெருமை. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் இந்திய ஓடிடி தளங்களில் சிறந்து விளங்கும் முன்னணி ஓடிடி அடையாளமாக மாறியுள்ளது. அத்தளத்தில் சிறந்த திரைப்படங்கள் சிறப்பாக அங்கீகரிக்கப்பட்டு, பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்படுகின்றன.

Advertisment

டாணாக்காரன் திரைப்படத்தின் மீது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஆர்வம் காட்டியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். கதையின் மீது நம்பிக்கை வைத்த எனது தயாரிப்பாளர்களான எஸ்.ஆர். பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு, கோபிநாத், தங்க பிரபாகரன் ஆகியோருக்கு நன்றி.இந்த ஸ்கிரிப்டை வைத்து நான் பல தயாரிப்பு நிறுவனங்களை அணுகியபோது, முதலில் அனைவரும் தயங்கினர். திரைக்கதையில் பல மாற்றங்களை செய்ய பரிந்துரைத்தனர். ஆனால், பொட்டன்ஷியல் ஸ்டூடியோவின் தயாரிப்பாளர்கள் அத்தகைய மாற்றங்கள் எதையுமே சொல்லவில்லை. இது எனக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது.

மேலும் எனது இயக்கத்தில் எந்த குறையும் வராமல் இருக்க, அவர்கள் ஒரு பெரிய பட்ஜெட்டை படத்திற்காக செலவழித்தனர். அவர்கள் அனைவருக்கும் நன்றி. இந்தப் படத்தின் மீது நம்பிக்கை வைத்த விக்ரம் பிரபு சாருக்கு நன்றி. அவர் அற்புதமான நடிப்பை வழங்கியுள்ளார், மேலும் அவரது நடிப்பை பார்வையாளர்கள் விரும்புவார்கள், பெரிதும் பாராட்டுவார்கள் என்று நான் நம்புகிறேன்.

Advertisment

அஞ்சலி நாயர், லால் சார், எம்.எஸ்.பாஸ்கர் சார் மற்றும் இந்தப் படத்தில் நடித்த ஒவ்வொரு கலைஞர்களும் படத்தின் தரத்தை உயர்த்தி இருக்கிறார்கள். ரசிகர்களின் பாராட்டை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கிறேன்” எனக் கூறினார்.