Advertisment

விஜய் பட தயாரிப்பாளர் காலமானார்!

director t rama rao passes away

Advertisment

தயாரிப்பாளரும், இயக்குநருமானடி.ராமாராவ்(83) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் பல்வேறு படங்களை இயக்கியுள்ள இவர்தமிழில் யூத், தில், அருள், உனக்கும் எனக்கும், யாயா உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் பல முன்னணி நடிகர்களைவைத்து படம் இயக்கிய ராமாராவ் தமிழ் ஒரு படம் கூட இயக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தயாரிப்பாளர் டி.ராமாராவ்(83) உடல்நலக்குறைவு காரணமாக தி. நகரில் உள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இவரதுமறைவுக்கு ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

actor vijay telugu cinema
இதையும் படியுங்கள்
Subscribe