‘ரன் ராஜா ரன்' என்னும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சுஜித். இந்தபடத்தைதொடர்ந்து தன்னுடைய இரண்டாவது படமே மிகப்பெரும் பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமாக இயக்கினார். 'சாஹோ' என்று பெயரிடப்பட்ட அந்தபடம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என நான்கு மொழிகளில் வெளியானது.
கலவையான விமர்சனங்களைப் பெற்று வந்த 'சாஹோ' படத்தைதொடர்ந்து 'லுசிஃபர்' தெலுங்கு ரீமேக்கை இயக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. சிரஞ்சீவி இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.
கடந்த ஜூன் மாதத்தில் சுஜித் பல் மருத்துவரான பரவாலிகாவுடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த ஞாயிறு அன்று இரு வீட்டாருடன் கோல்கொந்தா ரெசார்ட்டில் திருமணம் முடிவடைந்துள்ளது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் மட்டுமே கலந்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.