Advertisment

ஊரடங்கையும் பொருட்படுத்தாது திருமணம் செய்துகொண்ட இயக்குனர்!

bdh

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் இந்தியாவில் உயர்ந்துகொண்டே வரும் நிலையில், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு தற்போது ஊரடங்கை வரும் மே 3-ம் தேதி வரை நீட்டித்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் திரையுலகமும் முடங்கியுள்ள நிலையில், திரையுலகினர் அனைவரும் வீட்டிலேயே இருந்து வரும் நிலையில் இயக்குனர் செல்வராகவனின் உதவி இயக்குனராக பணியாற்றிய சுஜாவின் திருமணம்இன்றுநடைபெற்றது.

Advertisment

இயக்குனர் செல்வராகவனின் இயக்கத்தில் சமீபத்தில் நடிகர் சூர்யாநடித்து வெளிவந்த என்.ஜி.கே உட்பட அவருடன் பல படங்களில் பணியாற்றிய உதவி இயக்குனர் சுஜா அரவிந்த் என்பவரை இன்று காலை சென்னை சூளைமேட்டில் உள்ள அவரது இல்லத்தில் செய்துகொண்டார். கரோனா பாதுகாப்பு கருதி மணமகன் மற்றும் மணமகளின் பெற்றோர் மட்டுமே கலந்து கொண்டு மிக எளிய முறையில் இத்திருமணம் நடைபெற்றது.

Advertisment

selvaraghavan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe