director sugan kumar speech Kalaingar Nagar Movie Press Meet

'பிதா' என்ற திரைப்படத்தை 23.23 மணி நேரம் இயக்கிய இயக்குநர் சுகன் குமார், தனது அடுத்த படமான 'கலைஞர் நகர்' என்ற திரைப்படத்தை 23 மணி நேரம் அடைவதற்கு 7 நிமிடத்திற்கு முன்பாகவே, அதாவது 22.53 மணி நேரத்திற்குள் முடித்து சாதனை படைத்துள்ளார். சுகன் குமார் இயக்கத்தில் ப்ரஜின், ப்ரியங்கா, லிவிங்ஸ்டன் ஆகியோர் நடிக்கும் கலைஞர் நகர் படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை வடபழனியில் நடைபெற்றது. மேடையில் சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் மரக்கன்று வழங்கப்பட்டது.

Advertisment

இயக்குநர் சுகன் குமார் மேடையில் பேசுகையில், "சில இயக்குநர்கள் எல்லாம் திணறிட்டு இருக்கிறார்கள். 24 மணி நேரத்தில் படம் உருவாக்குவதற்கு... பெரிய பெரிய இயக்குநர்கள் எல்லாம் பிரம்மாண்டமாக படம் எடுக்கிறார்கள். இந்த சிறிய படத்தை பிரம்மாண்டமாக எடுத்துள்ளோம். இந்த படத்தை 23 மணி நேரத்துக்கு முன்னதாகவே 7 நிமிடங்களுக்கு முன் முடித்துவிட்டோம். மேடை நடனக் கலைஞர்களை மையப்படுத்தி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்த படத்தை எடுத்ததற்கு நான் மட்டும் முக்கிய காரணம் கிடையாது. இதில் என்னுடைய கடைசி உதவியாளர் வரைக்கும் உழைத்திருக்கிறார். கேமராமேன் இளையராஜா, எடிட்டர் சந்தீப், இசையமைப்பாளர் நரேஷ், நடிகர்கள் பிரஜின், பிரியங்கா, ஐஸ்வர்யா, திருக்குறளி, விஜய் ஆனந்த், ரவி, ரஞ்சித் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். எனது மனைவி உள்பட அனைவரும் தான்.படம் எடுத்தாலும் அதில் 3 பாடல்கள், 2 சண்டை, காமெடி என எல்லாமே போட்டு எடுக்கப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க மேடை நடனக் கலைஞர்களை மையப்படுத்தி, உண்மை சம்பவத்தை தெளிவாக காண்பித்துள்ளோம்" என்றார்.

நடிகை ப்ரியங்கா மேடையில் பேசுகையில், "மிக மிக அவசரம் மக்கள் மத்தியில் பல விருதுகள் கொடுத்தார்கள். அதுவே பெரிய விசயம். இந்த படம் 23 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட படம். ஒரு மாற்றத்தை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் மிக குறைவான படங்களில் நடித்து வருகிறேன். மிகப்பெரிய இடத்துக்கு வரவேண்டும் என்று ஆசை. இந்த காலகட்டத்துக்கு நிறைய நடிகை வருகிறார்கள். அவர்களுடைய திறமைக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களையும் வர வைக்க வேண்டும்" என்றார்.

Advertisment