Advertisment

புதிய தளத்தில் இயக்குநர் 'சுதா கொங்கரா'

Director 'Sudha Kongara' on new site

தமிழ் சினிமாவில் தன் இயக்கத்தின் மூலம் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருப்பவர் இயக்குநர் 'சுதா கொங்கரா'. 'துரோகி ' படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி 'இறுதிச்சுற்று' படத்தில் பிரபலமானார். இவர் இயக்கத்தில் 2020-ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான 'சூரரைப் போற்று' ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisment

சுதா கொங்கராவின் பெயரில் பல போலி கணக்குகள் சமூக வலைதளங்களில் இருந்து வருகின்றன. தற்போது, இயக்குநர் சுதா கொங்கரா சமூக வலைதளத்தில் ஒன்றான ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். முன்னதாக சுதா கொங்கராவின் படங்கள் குறித்த தகவல்கள், அறிவிப்புகளை அவரது பி.ஆர்.ஓ-க்கள் மற்றும் படத்தில் பணியாற்றியவர்கள் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் தற்போது அவர் அதிகாரபூர்வமாக தனது ட்விட்டர் கணக்கை தொடங்கியுள்ளார். தொடங்கிய முதல் நாளிலே 'முப்பத்தி ஆறாயிரம்' பேர் சுதா கொங்கரா கணக்கை பின் தொடர்ந்துள்ளனர்.

Advertisment

sudha kongara actor suriya
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe