ADVERTISEMENT

'பிரம்மாஸ்திரம்' படத்தை தென்னிந்திய மொழிகளில் வெளியிடும் ராஜமௌலி !

07:18 PM Dec 18, 2021 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

இயக்குநர் அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர் கபூர் 'பிரம்மாஸ்திரம்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஆலியா பட் நடிக்கிறார். இவர்களுடன் நாகார்ஜுனா அக்கினேனி, மௌனி ராய், அமிதாப்பச்சன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடிக்கின்றனர். மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படம் மூன்று பாகங்களாக தயாராகவுள்ளது. இந்திய புராணங்கள் மற்றும் நவீன உலகம் என இரண்டும் கலந்த ஒரு காவியமாக பிரம்மாஸ்திரம், 2022 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உருவாகியுள்ளது. தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் 2022 ஆம் செப்டம்பர் 9ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் பிரம்மாஸ்திரம் படத்தின் தென்னிந்திய மொழிகளில் பிரபல இயக்குநர் ராஜமௌலி வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்," பிரம்மாஸ்திரம் திரைப்படத்தை நான்கு தென்மொழிகளிலும் பார்வையாளர்களுக்கு வழங்குவதில் நான் உண்மையிலேயே மகிழ்ச்சியடைகிறேன். பிரம்மாஸ்திரம் படத்தின் கரு தனித்துவமானது, இது கதை மற்றும் காட்சியிலும் பிரதிபலிக்கிறது. பல வழிகளில், இது பாகுபலியின் உழைப்பையும், காதலையும் எனக்கு நினைவூட்டுகிறது. நான் பாகுபலிக்கு செய்ததைப் போலவே, பிரம்மாஸ்திரம் திரைப்படத்தை உருவாக்குவதில் அயன் அதிக நேரத்தை செலவிடுவதையும், அதைச் சரியாக உருவாக்குவதில் காட்டும் பொறுமையையும் நான் பார்த்துகொண்டிருக்கிறேன். இந்தத் திரைப்படம் பழங்கால இந்தியப் பண்பாட்டின் கருப்பொருளை, நவீன தொழில்நுட்பம் மற்றும் அதிநவீன ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் உடன் இணைத்து உங்கள் மனதைக் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. எனது திரைப்பயணத்தில், நான் நினைத்து மகிழக்கூடிய ஒன்றாக அயனின் சினிமா இருக்கும். அயனின் பார்வை இந்திய சினிமாவில் ஒரு புதிய அத்தியாயமாக இருக்கும், மேலும் பாகுபலிக்குப் பிறகு தர்மா புரோடக்சன் உடன் மீண்டும் இணைந்திருப்பதில் பெருமிதம் கொள்கிறேன். கரண் நல்ல படங்களை கண்டுணர்வதில் ஆழ்ந்த புரிதலும், உணர்வும் கொண்டவர், அவருடன் மீண்டும் சேர்ந்து, ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து இந்தப் படத்தை வழங்குவதில் பெருமைப் படுகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT