/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/dc-Cover-bchelmqb50dqohovu7gkno5oi7-20180215225547.Medi_.jpeg)
மன்னர் வகையறா படத்தை தொடர்ந்து நடிகர் விமல் ‘கன்னி ராசி’ என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். கிங் மூவி மேக்கர்ஸ் பி.ஷமீம் இப்ராகிம் தயாரிப்பில், எஸ்.முத்துக்குமரன் இயக்கும் இப்படத்தில் விமலுக்கு ஜோடியாக, வரலட்சுமி சரத்குமார் நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியான நிலையில் இப்படத்தின் இயக்குனர் எஸ்.முத்துக்குமரன் படத்தை பற்றி பேசும்போது...."படத்தில் கதாநாயகன் விமல் குடும்பத்தினர் அனைவருக்கும் கன்னிராசி. எல்லோருமே காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். ஆனால் விமல், பெற்றோர்கள் நிச்சயிக்கும் பெண்ணைத் தான் திருமணம் செய்து கொள்வது என்ற லட்சியத்துடன் இருக்கிறார். இந்த நிலையில் விமல் வீட்டின் எதிர் வீட்டிற்கு வரலட்சுமி குடும்பத்தினர் குடி வருகிறார்கள். இரண்டு குடும்பத்தினரும் சந்தித்து கொள்ளும் நிலையில் என்ன நடக்கிறது என்பதை நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறோம். இப்படத்தில் விமலும், வரலட்சுமியும் முதன்முறையாக இணைந்து நடிக்கின்றனர். படம் முழுவதுமே விமலும், வரலட்சுமியும் செய்கின்ற காதல் காட்சிகளும், காமெடி காட்சிகளும் மக்களின் பேராதரவைப் பெறுவது நிச்சயம்" என்றார் இயக்குனர் எஸ்.முத்துக்குமரன்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/25520166_1989059468016271_1652769857_n.jpg)