Advertisment

ஹிட்டடித்த அம்மா பாடல்... இயக்குநர் சிறுத்தை சிவா பாராட்டு

director siva praised kanam movie mother song

அறிமுக இயக்குநர் ஸ்ரீ கார்த்தி நடிகர் சர்வானாந்த்நடிக்கும் கணம்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக ரீத்துவர்மா நடிக்க அமலா, நாசர், சதீஷ், ரமேஷ் திலக், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எஸ்.ஆர் பிரபு தயாரிக்கும் இப்படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு, இறுதி கட்ட பணியில் தீவிரம் காட்டி வருகிறது.தமிழில் 'கணம்' என்ற பெயரிலும், தெலுங்கில் 'ஒகே ஒக ஜீவிதம்' என்ற பெயரிலும்உருவாகியுள்ள இப்படத்தின்அம்மா பாடல் சமீபத்தில் வெளியானது. சித் ஸ்ரீராம் குரலில் கவனம் ஈர்க்கும் இப்பாடலுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

அந்தவகையில்இயக்குநர்சிவா 'கணம்' படத்தின் அம்மா பாடலைகேட்ட பிறகு இசையமைப்பாளர் ஜாக்ஸ் பிஜாய்யைபாராட்டிவாட்ஸ் அப்பில் பாராட்டி செய்தி அனுப்பியுள்ளார். இது குறித்துதனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள இசையமைப்பாளர் ஜாக்ஸ் பிஜாய், ‘கணம்'படத்தின் அம்மா பாடல் வெளியானதிலிருந்து எனக்கு ஏராளனமான குறுஞ்செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. அதில் உச்சகட்டமாக தனது படங்களின் மூலம் உயிரோட்டமான பாடல்களைகொடுக்கும் இயக்குநர்சிறுத்தை சிவாவின் பாராட்டு அமைந்துள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

siruthai siva kanam movie
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe