Published on 10/07/2018 | Edited on 10/07/2018


அஜித் - நயன்தாரா இணைந்து நடிக்கும் 'விஸ்வாசம்' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் விவேக், யோகிபாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். சத்யஜோதி பிலிம்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்தில் வெள்ளை நிற தாடியுடன் அண்ணன், கருப்பு நிற தாடியுடன் தம்பி என இரட்டை வேடங்களில் அஜித் நடிப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியின் போது படத்தின் இயக்குனர் சிவாவை ரசிகர்கள் சமீபத்தில் சூழ்ந்து கொண்டு படம் குறித்து கேட்டப்போது 'இது, தல மற்றும் மற்ற ரசிகர்களுக்கும் ஏற்ற மாஸ் படம்' என்று சிவா பதில் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய தகவலால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.