Director Shankar's sudden meeting with Rajinikanth

2007-ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில்ஷங்கர்தயாரிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் 'சிவாஜி'. 'ஏவிஎம்ப்ரொடக்ஷன்ஸ்' தயாரித்திருந்த இப்படத்தில் கதாநாயகியாக ஸ்ரேயா நடித்திருந்தார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் மறைந்த நடிகர்கள் விவேக், ரகுவரன், மணிவண்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். இப்படம் உலகம் முழுவதும் 150 கோடிக்கு மேலாக வசூலித்து திரையரங்குகளில் 175 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. ரஜினியின்ஸ்டைல்மற்றும்ஆக்ஷன், காதல்,செண்டிமெண்ட்எனபக்காவானமாஸ்கார்ஷியல்படமாக வெளிவந்த இப்படம் இன்றுடன் 15 ஆண்டுகளை நிறைவுசெய்கிறது. இதனையொட்டி ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளத்தில்படக்குழுவினருக்குப்பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் ரஜினியை இயக்குநர்ஷங்கர்நேரில் சந்தித்துள்ளார். இது தொடர்பானபுகைப்படத்தைத்தனதுட்விட்டர்பக்கத்தில் பகிர்ந்து, "நம்ம'சிவாஜி திபாஸ்' ரஜினிகாந்த் சார் அவர்களை இந்த மறக்கமுடியாத நாளில் சந்தித்ததில் மகிழ்ச்சி "எனக்குறிப்பிட்டுள்ளார். மேலும் ரஜினியின் ஆற்றல், பாசம் மற்றும்பாசிட்டிவ்வைப்இந்த நாளை சிறப்பாக்கியுள்ளது என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

Advertisment