ggdgedg

நாடு முழுவதும் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாக தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகள், தங்கள் மாநிலத்தில் நிலவும் சூழலுக்கு ஏற்ப ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. பல்வேறு கரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுத்துச் செயல்படுத்திவரும் மத்திய, மாநில அரசுகள், அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளன.

Advertisment

இதற்கிடையே, கரோனா இரண்டாம் அலையால் விவேக், கே.வி. ஆனந்த், பாண்டு, நெல்லை சிவா, ஜோக்கர் துளசி, மாறன், பவுன்ராஜ், அருண்ராஜா காமராஜ் மனைவி சிந்துஜா, நிதீஷ் வீரா உள்ளிட்ட பல தமிழ் சினிமா பிரபலங்கள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளது மக்களிடையே கவலையையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இந்நிலையில், இயக்குநர் ஷங்கரின் தாயார் எஸ். முத்துலட்சுமி சென்னையில் காலமானார். அவருக்கு வயது 88. வயது மூப்பு காரணமாக அவரது உயிர் பிரிந்துள்ளது. அவரது இறுதிச் சடங்குகள் இன்று (19.05.2021) நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷங்கரின் தாயார் மறைவுக்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.