இயக்குநர்வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்பு ‘மாநாடு’ படத்தில் நடித்துள்ளார். இதில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். சுரேஷ் காமாட்சி தயாரித்திருக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.பல பிரச்சனைகளைத் தாண்டி கடந்த 25ஆம் தேதி திரையரங்கில் வெளியான இப்படம்,வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. இதனைத் தொடர்ந்து ‘மாநாடு’ படக்குழுவினருக்கு நடிகர் ரஜினிகாந்த் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
அந்தவகையில்இயக்குநர்ஷங்கர் ‘மாநாடு’ படத்தைப் பார்த்துப் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதில், "மாநாடு திரைப்படத்தைஅற்புதமாக எழுதி இயக்கியிருக்கிறார்வெங்கட் பிரபு. சிம்புவின் நடிப்பு சிறப்பு, எஸ்.ஜே. சூர்யா அற்புதம்... யுவன் ஷங்கர் ராஜாவின் இசை அருமையாக இருந்தது. டைம் லூப் கதைக்களம் சிறப்பாகக் கையாளப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவிற்கு இது ஒரு புதிய அனுபவம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.