Advertisment

'மகாராஜா' மௌலிக்கு வாழ்த்துகள்- 'ஆர்ஆர்ஆர்' குறித்து 'ஷங்கர்' ட்வீட்

director shankar tweet about rrr movie

Advertisment

ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக திரையில் வெளிவந்திருக்கும் படம் 'ஆர்ஆர்ஆர்'. ஆலியா பட், அஜய் தேவ்கன்,சமுத்திரகனி மற்றும் ஸ்ரேயா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பாகுபலி வெற்றியைத்தொடர்ந்து ராஜமௌலி இப்படத்தை இயக்கியிருக்கிறார். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இயக்குநர் ஷங்கர்'ஆர்ஆர்ஆர்' படம் குறித்து தனது அனுபவத்தை ஒரு பதிவாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அப்பதிவில், "கவர்ச்சிகரமான, தைரியமான ,வலுவான. எல்லா நேரங்களிலும் எதிரொலிக்கும் ஒரு கர்ஜனை அது. ஒரு இணையற்ற அனுபவத்தை கொடுத்ததற்கு முழு குழுவிற்கும் நன்றி. ராம்சரணின் பொங்கி எழும் நடிப்பு மற்றும் திரையில் தோன்றும் தன்மை, ஜூனியர் என்டிஆரின் மிரட்டலான நடிப்பு உங்கள் இதயத்தை வசீகரிக்கும். உங்கள் கற்பனை தோற்காமல் இருக்கும், 'மகாராஜா' மெளலிக்கு வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

director Shankar ss rajamouli RRR
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe