Skip to main content

'மகாராஜா' மௌலிக்கு வாழ்த்துகள்- 'ஆர்ஆர்ஆர்' குறித்து 'ஷங்கர்' ட்வீட்

Published on 26/03/2022 | Edited on 26/03/2022

 

director shankar tweet about rrr movie

 

ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக திரையில் வெளிவந்திருக்கும் படம்  'ஆர்ஆர்ஆர்'. ஆலியா பட், அஜய் தேவ்கன்,சமுத்திரகனி மற்றும் ஸ்ரேயா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பாகுபலி வெற்றியைத் தொடர்ந்து ராஜமௌலி இப்படத்தை  இயக்கியிருக்கிறார். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

 

இயக்குநர் ஷங்கர் 'ஆர்ஆர்ஆர்' படம் குறித்து தனது அனுபவத்தை ஒரு பதிவாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

அப்பதிவில், "கவர்ச்சிகரமான, தைரியமான ,வலுவான. எல்லா நேரங்களிலும் எதிரொலிக்கும் ஒரு கர்ஜனை அது. ஒரு இணையற்ற அனுபவத்தை கொடுத்ததற்கு முழு குழுவிற்கும் நன்றி. ராம்சரணின் பொங்கி எழும் நடிப்பு  மற்றும் திரையில் தோன்றும் தன்மை, ஜூனியர் என்டிஆரின் மிரட்டலான நடிப்பு உங்கள் இதயத்தை வசீகரிக்கும். உங்கள் கற்பனை தோற்காமல் இருக்கும், 'மகாராஜா' மெளலிக்கு வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோலிவுட், டோலிவுட், பாலிவுட் - ஷங்கர் மகள் வரவேற்பு விழாவில் ஒன்றுகூடிய பிரபலங்கள்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024

 

இயக்குநரின் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இவருக்கும் புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்திற்கும் கடந்த 2021ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால் திருமணமான சில மாதங்களில், இருவருக்கும் விவாகரத்து நடந்தது. பின்பு இரண்டாவது முறையாக தருண் கார்த்திகேயன் என்பவருடன் ஐஸ்வர்யாவிற்கு கடந்த பிப்ரவரி மாதம் நிச்சயம் நடந்தது. இந்த நிலையில் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் தம்பதிக்கு நேற்று சென்னையில் திருமணம் நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் முதல் ரஜினி, கமல், சூர்யா, விக்ரம் கார்த்தி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர். மேலும் திருமண வரவேற்பு நிகழ்வில் ஏ.ஆர் ரஹ்மான், மோகன்லால், சிரஞ்சீவி, ராம் சரண், வெற்றிமாறன், விஜய் சேதுபதி, லோகேஷ் கனகராஜ், அட்லீ, ரன்வீர் சிங், நெல்சன், அனிருத், ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால் உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Next Story

பிரபலங்களின் வாழ்த்தில் களைகட்டிய ஷங்கர் மகள் திருமணம்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024

 

இயக்குநரின் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இவருக்கும் புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்திற்கும் கடந்த 2021ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால் திருமணமான சில மாதங்களில், இருவருக்கும் விவாகரத்து நடந்தது. பின்பு இரண்டாவது முறையாக தருண் கார்த்திகேயன் என்பவருடன் ஐஸ்வர்யாவிற்கு கடந்த பிப்ரவரி மாதம் நிச்சயம் நடந்தது. இந்த நிலையில் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் தம்பதிக்கு இன்று சென்னையில் திருமணம் நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். மேலும் ரஜினி, கமல், சூர்யா, விக்ரம் கார்த்தி உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் கலந்து கொண்டு வாழ்த்தினர்.