Advertisment

முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த இயக்குநர் ஷங்கர்!

shankar

Advertisment

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் - ரோஹித் தாமோதரன் திருமணம் நேற்று (27.06.2021) நடைபெற்றது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வெல்கம் ஹோட்டலில் நடந்த இந்தத் திருமண நிகழ்வில் இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்துகொண்டனர். மேலும், தமிழ்நாடுமுதல்வர் மு.க. ஸ்டாலின், சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், நடிகரும் திமுக எம்.எல்.ஏ-வுமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இந்த நிலையில், இயக்குநர் ஷங்கர் தன்னுடைய மகள் திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியதற்காக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "தனது மதிப்புமிக்க நேரத்தை ஒதுக்கி எனது மகள் திருமணத்தில் கலந்துகொண்டதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். மணமக்களை ஆசிர்வதித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

director Shankar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe