Director shankar praises jai bhim film

இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் 90களில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட ‘ஜெய் பீம்’ படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப்பெற்றது. மேலும் ‘ஜெய் பீம்’ திரைப்படம், குறிப்பிட்ட சமூகத்தினரைத் தவறாக சித்தரித்திருப்பதாககூறி சர்ச்சைகளையும் கிளப்பியது. இருப்பினும் தமிழ்நாடு முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா ரசிகர்கள் எனப் பலரும் ‘ஜெய் பீம்’ படத்தைப் பாராட்டியிருந்தனர்.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="beea5698-d018-4807-bcf1-445ea845585d" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/ik-ad%20%281%29_38.jpg" />

Advertisment

இந்நிலையில், இயக்குநர் ஷங்கர் ‘ஜெய் பீம்’ படத்தைப் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "‘ஜெய் பீம்’ படம் குரலற்றவர்களுக்கானகுரல். இயக்குநரின் எதார்த்தமானஅணுகுமுறை பாராட்டுக்குரியது .நடிப்பை தாண்டி சமூகத்தின்மீது சூர்யா காட்டும் கருணை பாராட்டத்தக்கது. சக்தி வாய்ந்த படங்கள் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும் என்பது மீண்டும் நிரூபணமாகியிருக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment