Advertisment

"பெரியப்பா அனுபவத்தை கொடுத்ததற்கு நன்றி" - இயக்குநர் ஷங்கர் பாராட்டு

director shankar praised kgf2

பிரசாந்த் நீல் இயக்கத்தில், யஷ் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான படம் 'கே.ஜி.எஃப். சேப்டர் 1'.இந்திய அளவில் இப்படத்திற்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பைத்தொடர்ந்து, இதன் அடுத்த பாகம் 'கே.ஜி.எஃப் சேப்டர் 2' என்ற பெயரில் வெளியாகி பெரும் பாராட்டுக்களை பெற்றதோடு, உலகளவில்ரூ.1000 கோடி மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. இதுவரை தென்னிந்திய படங்களானபாகுபலி ஆர்.ஆர்.ஆர் படங்கள் மட்டுமே இந்த ரூ.1000 கோடி வசூல் சாதனையை நிகழ்த்திருந்த நிலையில் தற்போது அந்த பட்டியலில் 'கே.ஜி.எஃ ப்2' படம் இணைந்துள்ளது.

Advertisment

இந்நிலையில் இப்படத்தை பார்த்த இயக்குநர் ஷங்கர் படகுழுவினரை பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "கே.ஜி.எஃப் 2 பார்த்துவிட்டேன், கதை, திரைக்கதை, எடிட்டிங் எல்லாம் சிறப்பாக இருந்தது.யஷின் நடிப்பு மாஸ். பெரியப்பா அனுபவத்தை கொடுத்த இயக்குநர் பிரசாந்த் நீலுக்கு நன்றி. யஷ் மாஸாக நடித்துள்ளார். படக்குழுவினர் அனைவருக்கும் பாராட்டுக்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

director Shankar Prashanth Neel yash kgf 3 kgf 2
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe