/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/63_7.jpg)
மலையாளத் திரையுலகில் படத்தொகுப்பாளராக அறிமுகமாகி, 'கரி' என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியவர் ஷாநவாஸ். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் 'சூஃபியும் சுஜாதையும்', கரோனா நெருக்கடி நிலை காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதையடுத்து, ஓ.டி.டி. தளத்தில் வெளியான இப்படம் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.
இதனையடுத்து, தனது அடுத்த படத்திற்கான கதையை உருவாக்கும் பணிக்காக பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடியில் ஷாநவாஸ் தங்கியிருந்தார். அவருக்கு கடந்த 19-ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளது. இச்செய்தியை அறிந்த மலையாளத் திரையுலகு பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)