Advertisment

பேயைத் தேடிப்போன இடத்தில் கதாநாயகியைத் தேடிய படக்குழு !

director selva anbarasancomplaint against meera mitun

"எட்டுத் தோட்டாக்கள்" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மீரா மிதுன். மாடலிங் துறையிலிருந்து தமிழ் சினிமாவில் ஒருசில கதாபாத்திரங்களில் தோன்றினார். இதனை தொடர்ந்து கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் மூன்றாம் சீஸனில் பங்குபெற்றதன் மூலம் பிரபலமடைந்தார். அதன் பிறகு தனது சர்ச்சைக்குரிய பேச்சால் வழக்கில் சிக்கி வரும் மீரா மீதுன் இயக்குநர் செல்வ அன்பரசன் இயக்கத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 'பேய காணோம்' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை குளோபல் என்டர்டைமெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. காமெடி கலந்த பேய் படமாக உருவாகி வரும் இப்படத்தின் 80 சதவீத படப்பிடிப்பை முடித்துள்ள படக்குழு, இறுதிக்கட்ட படப்பிடிப்பைகொடைக்கானலில்நடத்தி வந்தது.

Advertisment

இந்நிலையில் நடிகை மீரா மிதுன் இரவோடு இரவாக தனது 6 உதவியாளர்களுடன் படப்பிடிப்பு தளத்தில் இருந்து மாயமாகியுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த இயக்குநர்செல்வா அன்பரசன் அவர்கள் தங்கியிருந்த அறைக்கு சென்று பார்த்துள்ளார். அப்பொழுதுதான் மீரா மிதுன் தனது உடமைகளை எடுத்துக்கொண்டு படப்பிடிப்பு தளத்திலிருந்துஓட்டம் பிடித்தது தெரியவந்துள்ளது.இதனைத்தொடர்ந்து படத்தின் இயக்குநர் செல்வ அன்பரசன் நடிகர் சங்கத்தில் மீரா மிதுன் மீது புகார் கொடுத்துள்ளார்.

Advertisment

actress meera mitun
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe