Skip to main content

பேயைத் தேடிப்போன இடத்தில் கதாநாயகியைத் தேடிய படக்குழு !

Published on 17/12/2021 | Edited on 17/12/2021

 

director selva anbarasancomplaint against meera mitun

 

"எட்டுத் தோட்டாக்கள்" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மீரா மிதுன். மாடலிங் துறையிலிருந்து தமிழ் சினிமாவில் ஒருசில கதாபாத்திரங்களில் தோன்றினார். இதனை தொடர்ந்து கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் மூன்றாம் சீஸனில் பங்குபெற்றதன் மூலம் பிரபலமடைந்தார். அதன் பிறகு தனது சர்ச்சைக்குரிய பேச்சால்  வழக்கில் சிக்கி வரும் மீரா மீதுன் இயக்குநர் செல்வ அன்பரசன் இயக்கத்தில் முன்னணி கதாபாத்திரத்தில்  நடித்து வருகிறார். 'பேய காணோம்' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை குளோபல் என்டர்டைமெண்ட்ஸ்  நிறுவனம் தயாரிக்கிறது. காமெடி கலந்த பேய் படமாக உருவாகி வரும் இப்படத்தின் 80 சதவீத படப்பிடிப்பை முடித்துள்ள படக்குழு, இறுதிக்கட்ட படப்பிடிப்பை கொடைக்கானலில் நடத்தி வந்தது.

 

இந்நிலையில் நடிகை மீரா மிதுன் இரவோடு இரவாக தனது 6 உதவியாளர்களுடன் படப்பிடிப்பு தளத்தில் இருந்து மாயமாகியுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த இயக்குநர் செல்வா அன்பரசன் அவர்கள் தங்கியிருந்த அறைக்கு சென்று பார்த்துள்ளார். அப்பொழுதுதான் மீரா மிதுன் தனது உடமைகளை எடுத்துக்கொண்டு படப்பிடிப்பு தளத்திலிருந்து ஓட்டம் பிடித்தது தெரியவந்துள்ளது.இதனைத்தொடர்ந்து படத்தின் இயக்குநர் செல்வ அன்பரசன் நடிகர் சங்கத்தில் மீரா மிதுன் மீது புகார் கொடுத்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நடிகை மீரா மிதுன் வழக்கு - அதிரடி முடிவெடுத்த போலீசார்

Published on 14/11/2022 | Edited on 14/11/2022

 

actress meera mithun case update

 

மாடல் அழகியும், நடிகையுமான மீரா மிதுன் சில மாதங்களுக்கு முன்பு பட்டியலினத்தவர் குறித்து அவதூறாகப் பேசி வீடியோ வெளியிட்டார். அது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மீரா மிதுன் மீது காவல்துறையில் புகார் அளித்திருந்தனர். இந்த வழக்கு தொடர்பாக மீரா மிதுனும் அவரது நண்பர் சாம் அபிஷேக்கும் கைது செய்யப்பட்டு பின்பு நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். 

 

ad

 

பின்பு இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது மீரா மிதுன் ஆஜராகாததால் அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்பு அடுத்த கட்ட விசாரணையில், நீதிமன்ற உத்தரவின்படி மீரா மிதுனை வேளச்சேரி மற்றும் சேத்துப்பட்டில் தேடியும் கிடைக்கவில்லை. விரைவில் மீரா மிதுனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் வழக்கு விசாரணை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டது. 

 

இதையடுத்து நடந்த விசாரணையில் நடிகை மீரா மிதுன் தலைமறைவாகி அடிக்கடி தங்குமிடத்தை மாற்றி வருவதால் அவரை கைது செய்ய முடியவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் மீரா மிதுன் தலைமறைவான நிலையில் அவரது செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. 2 மாதங்களுக்கு மேலாக பிடிவாரண்ட் நிலுவையில் உள்ள நிலையில் கைது செய்யாததால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருந்தது. 

 

இதனைத் தொடர்ந்து மீரா மிதுன் தலைமறைவாக இருந்து வரும் நிலையில் அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்ப மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனிடையே கடந்த ஆகஸ்ட் மாதம் மீரா மிதுனின் தாயார் தனது மகளைக் கண்டுபிடித்து தர வேண்டும் என புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

 


 

Next Story

நடிகை மீரா மிதுன் வழக்கு; மீண்டும் விசாரணையை ஒத்திவைத்த நீதிமன்றம்

Published on 19/10/2022 | Edited on 19/10/2022

 

actress meera mithun case; The court adjourned the hearing again

 

மாடல் அழகியும், நடிகையுமான மீரா மிதுன் சில மாதங்களுக்கு முன்பு பட்டியலினத்தவர் குறித்து அவதூறாகப் பேசி வீடியோ வெளியிட்டார். அது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மீரா மிதுன் மீது காவல்துறையில் புகார் அளித்திருந்தனர். இந்த வழக்கு தொடர்பாக மீரா மிதுனும் அவரது நண்பர் சாம் அபிஷேக்கும் கைது செய்யப்பட்டு பின்பு நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். 

 

பின்பு இந்த வழக்கு கடந்த 6ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது மீரா மிதுன் ஆஜராகாததால் அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்பு அடுத்த கட்ட விசாரணையில், நீதிமன்ற உத்தரவின்படி மீரா மிதுனை வேளச்சேரி மற்றும் சேத்துப்பட்டில் தேடியும் கிடைக்கவில்லை. விரைவில் மீரா மிதுனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டது. 

 

பின்பு இந்த வழக்கு கடந்த மாதம் 28ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகை மீரா மிதுன் தலைமறைவாகி அடிக்கடி தங்குமிடத்தை மாற்றி வருவதால் அவரை கைது செய்ய முடியவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் மீரா மிதுன் தலைமறைவான நிலையில் அவரது செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. 2 மாதங்களுக்கு மேலாக பிடிவாரண்ட் நிலுவையில் உள்ள நிலையில் கைது செய்யாததால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருந்தது. 

 

இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் இன்று (19.10.2022) சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகை மீராமிதுன் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார் எனவும் அவரது குடும்பத்தினரை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை அடுத்த மாதம் 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.