Director Seenuramasamy, who plays the actor; first Look Poster Release

தமிழ் சினிமாவில் கூடல்நகர் திரைப்படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர் சீனுராமசாமி. தொடர்ந்து தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே, மாமனிதன் போன்ற படங்கள் இயக்கியதன் மூலமாக அனைத்து விதமான ரசிகர்களையும் ஈர்த்தவர். இவருடைய இடம் பொருள் ஏவல், இடி முழக்கம் ஆகிய படங்கள் விரைவில் வெளியாக உள்ளது.

Advertisment

இவரது இயக்கத்தில் வெளியான தர்மதுரை திரைப்படத்தில் நூலகராக ஒரு காட்சியில் மட்டும் இடம்பெறுவார். தற்போது புதுமுக இயக்குநர் விஜய் கார்த்திக் இயக்கும் "ஈகுவாலிட்டி” என்ற திரைப்படத்தில் முழுவதுமாக நடித்திருக்கிறார். இது குறித்து இயக்குநர் சீனுராமசாமி தன்னுடைய வலைதள பக்கத்தில் “குறை நிறைகளோடு என் படைப்புகளை ஆதரித்து அங்கீகரித்த தமிழ் சமூகம் எனை நடிகனாகவும் ஏற்று கொள்ளும் என்ற நம்பிக்கையில் நான் நடித்த திரைப்படத்தின் முதல் பார்வையை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்” என்று போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

Advertisment