Advertisment

"காலத்தின் நாயகர்களே விரைந்து வருக" - இயக்குநர் சீனு ராமசாமி உருக்கம்

Advertisment

director seenu ramasamy tweet about bharathiraja and vaiko

இந்தியாவில் கரோனா மூன்றாவது அலை வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. தொற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்த அதிக அளவு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே, தமிழ்நாட்டில் முக்கிய நபர்கள் மற்றும் திரைப்பிரபலங்களுக்கு கரோனா தொற்று ஏற்படுகிறது.

Advertisment

அந்தவகையில்தற்போதுஇயக்குநர்பாரதிராஜாவுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் மதிமுகபொதுச்செயலாளர் வைகோவிற்கும்கரோனாஉறுதி செய்யப்பட்டதை அடுத்து தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் இயக்குநர் சீனு ராமசாமி பகிர்ந்துள்ள ட்விட்டர் பதிவில்,

"காலத்தின் நாயகர்களே

விரைந்து வருக

இருவரோடும்

பழகுவதற்கு பாக்கியம்

பெற்றவனின் அழைப்பு இது.

நீங்கள் தந்த

ஊக்கமதை

ஒருக்காலும் மறவேன்.

'கலிங்கப்பட்டியின் சிங்கம்'

தலைவர் வைகோ அவர்களும்

என் 'தென்கிழக்குச்சீமை'

இயக்குநர் பாரதிராஜா அவர்களும்

தொற்று நீங்கி நலமாக

விரும்புகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Bharathi Raja seenu ramasamy vaiko
இதையும் படியுங்கள்
Subscribe