Advertisment

"தமிழகத்தை ஆளும் ஆண் தாய் முதல்வர் மு.க ஸ்டாலின்" - சீனு ராமசாமி புகழாரம்

director seenu ramasamy talk tn cm mk stalin

சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாமனிதன்'. இப்படத்தில், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை காயத்ரி நடித்துள்ளார். இளையராஜா - யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர்ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை நிலையில் மாமனிதன்படம் மே 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Advertisment

இந்நிலையில் இப்படத்தின் இயக்குநர் சீனு ராமசாமி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "என் திரைப்படங்களை பார்த்து நெகிழ்ந்து மகிழ்ந்து ரசித்து தொடர்ந்து ஊக்கப்படுத்தி ஆக்கத்தின் பாதையில் செல்ல உந்துசக்தியாக இருக்கும் தமிழகத்தை ஆளும் 'ஆண் தாய்' மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலினை சந்தித்து வெளிவர இருக்கும் 'மாமனிதன்','இடிமுழக்கம்'ஆகிய படங்களுக்கு வாழ்த்தும் ஆசியும் பெற்று என் கவிதை புத்தகத்தையும் அதே சமயம் தமிழகத்தில் நோயும் இயற்கை சீற்றத்துக்கெதிராக அவர் ஆற்றிய போர்க்கால நடவடிக்கைகள் நினைவாக,நன்றி கூறும் விதமாக நான் நேசித்து படித்த ஜான் ரீடு எழுதிய 'உலகை குலுக்கிய பத்து நாட்கள்' நூலினை அவருக்கு தந்தேன்.அவர்தம் வரலாற்று நூலின் முதல் பாகமான'உங்களில் ஒருவன்' நூலில் கையொப்பமிட்டு பரிசாக தந்தார். 'மக்கள் அன்பன்' என் கண்ணே கலைமானே உதயநிதி ஸ்டாலினும் உடன்இருந்து வாழ்த்தினார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

actor vijay sethupathi cm stalin maamanithan seenu ramasamy
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe