Advertisment

யதார்த்த சினிமா ஆர்வலர்கள் பாராட்டும் இயக்குநர் சீனுராமசாமி!

Seenu

தமிழர்களின் கிராம வாழ்வியல் நெறிமுறைகளையும், அவர்கள் வாழும் இயற்கை சூழலியலுடன் பொருத்தி, நிஜத்தன்மையுடன் திரைப்படங்களாக வடிவமைத்து, வட்டார வழக்கு வார்த்தைகளுடன் யதார்த்தத்திற்கு நெருக்கமாக படங்களை இயக்கியவர் கவிஞரும், திரைப்பட இயக்குநருமான சீனுராமசாமி.

Advertisment

கூடல்நகர், தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, இடம் பொருள் ஏவல், தர்மதுரை, கண்ணே கலைமானே மாமனிதன்  என மொத்தம் ஏழு படங்களை இயக்கியுள்ளார். இதில் இடம் பொருள் ஏவல் இன்னும் வெளியாகவில்லை. 2010ஆம் ஆண்டு வெளியான தென்மேற்கு பருவாக்காற்று படத்திற்காக தேசிய விருது பெற்றார்.  

Advertisment

இவர் திரைப்படங்கள் இயக்குவதோடு மட்டுமல்லாமல், கவிதை புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார். புகார் பெட்டியின் மீது படுத்து உறங்கும் பூனை, காற்றால் நடந்தேன், நதியழகி ஆகிய கவிதை தொகுப்பு குறிப்பிடத்தகுந்தவை. சமீபத்தில் இவரது புத்தகம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

1975ஆம் ஆண்டு மதுரையில் பிறந்த சீனுராமசாமிக்கு இன்று பிறந்தநாள். உலகமெங்கும் உள்ள யதார்த்த சினிமா ஆர்வலர்கள், கலைஞர்கள், ரசிகர்கள் இவரது பிறந்தநாளை முன்னிட்டு இவருக்கு வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்து வருகிறார்கள்.

tamilcinema seenu ramasamy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe