/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/seenu ramasamy_3.jpg)
முத்தையா முரளிதரனாக, விஜய் சேதுபதி நடிப்பதற்கு உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்கள், தங்களின் கண்டனங்களைப் பதிவு செய்து வந்தனர்.
இந்நிலையில், "தமிழ்நாட்டின் ஒரு தலைசிறந்த கலைஞன் பாதிப்படைவதை நான் விரும்பவில்லை. அதுமட்டுமில்லாது விஜய் சேதுபதி அவர்களின் கலைப்பயணத்தில், வருங்காலங்களில் தேவையற்றதடைகள் எற்பட்டுவிடக் கூடாது என்பதையும் கருத்தில்கொண்டு இத்திரைப்படத்திலிருந்து விலகிக்கொள்ளுமாறு அவரை கேட்டுகொள்கிறேன்" என்று வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டார் முத்தையா முரளிதரன்.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக ட்விட்டரில் விஜய் சேதுபதி அதைப் பகிர்ந்து, "நன்றி! வணக்கம்!" என்று பதிவிட்டிருந்தார். இதன்பின் பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு, "நன்றி! வணக்கம்!" என்றால் 'எல்லாம் முடிந்துவிட்டது' என்பதுதான் பொருள் என்று விளக்கினார்.
இதனிடையே இயக்குனர் சீனு ராமசாமி விஜய் சேதுபதி இந்தப் படத்தில் நடிக்கவே கூடாது என்றுதொடக்கத்தில்இருந்து ட்வீட் செய்து வந்தார். விஜய் சேதுபதி இந்தப் படத்தில் நடிக்க மாட்டேன் என்று சொன்ன பிறகுஅவருக்கு வாழ்த்தும் தெரிவித்தார் சீனு ராமசாமி.
இந்நிலையில், இன்று (28-10-2020) ட்விட்டரில்,“என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன். முதல்வர் அய்யா உதவ வேண்டும், அவசரம்” என முதல்வரிடம் வேண்டுகோள் வைத்துள்ளார்.
Follow Us