Skip to main content

கூத்துப்பட்டறை நாயகனின் நடிப்பில் 'மேகி அலைஸ் மரகதவல்லி'

Published on 24/10/2018 | Edited on 24/10/2018
maggy

 

 

 

ஸ்ரீசாய்கணேஷ் பிக்சர்ஸ் சார்பில் கார்த்திகேயன் ஜெகதீஷ் தயாரித்து, இயக்கும் படம் 'மேகி என்கிற மரகதவல்லி'. ஹாரர் காமெடி படமாக உருவாகியுள்ள இப்படம் குறித்து இயக்குனர் கார்த்திகேயன் ஜெகதீஷ் பேசுகையில்.... "ஹாரர் காமெடி ஜானரில் அனைத்து தரப்பு மக்களுக்கும் பிடிக்கும் வகையில் ‘மேகி என்கிற மரகதவல்லி’ என்ற படம் தயாராகியுள்ளது. வழக்கமாக அனைத்து பேய் படங்களிலும் பழிக்கு பழி வாங்கும் கதையிருக்கும். ஆனால் இந்த படத்தில் பேய் யாரையும் பழிவாங்கவில்லை. வயிறு வலிக்க சிரிக்கவைக்கும். இரட்டை அர்த்த வசனங்கள் கிடையாது. அதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைக்கும் இந்த ‘மேகி’ பேயைப் பிடிக்கும்" என்றார். கூத்துப்பட்டறையையில் பயிற்சிப் பெற்ற 'ஆதித்யா' செந்தில், 'காலா’ ப்ரதீப், ரியா, நிம்மி, மன்னை சாதிக், என முற்றிலும் புதுமுகங்கள் நடித்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல் மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் நடித்த முடித்துள்ளனர். மேலும் படத்தின் ஆடியோ விரைவில் வெளியாகவுள்ளது.
 

 

சார்ந்த செய்திகள்