சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா, ஹன்சிகா, ராதாரவி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் '100'. ஆரோ சினிமாஸ் தயாரித்துள்ள இப்படம் நீண்ட நாட்களாக வெளியீட்டுக்காக காத்திருக்கிறது.

Advertisment

adharva

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இப்படம் முதன் முதலில் மே 3ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், படத்தின் தயாரிப்பாளருக்கு ஃபைனான்ஸ் பிரச்சனையில் சிக்கியிருப்பதால் மே 3லிருந்து ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டு, மே 9ஆம் தேதிக்கு ரிலீஸ் தேதி மாற்றிவைக்கப்பட்டது .

நேற்று இப்படக்குழு ஊடகத்தினருக்கான பிரத்யேக காட்சி ஒன்றை ஏற்பாடு செய்து படத்தை திரையிட்டது. ஆனால், இன்றும் திரையரங்கில் படம் வெளியாகவில்லை. இந்நிலையில் இப்படம் வெளியாகததால் விரக்தியில் இயக்குனர் சாம் ஆன்டன் தெரிவித்துள்ளதாவது. “ '100' திரைப்படத்தின் மீது மிக அற்புதமான விமர்சனங்களைக் கொடுத்த தங்கள் அனைவருக்கும் நன்றி. நானும் எனது குழுவினரும் இந்தப் படத்திற்காக உடலையும் ஆன்மாவையும் ஒருமித்து செலுத்தி பணியாற்றியிருக்கிறோம்.

Advertisment

ஆனால், குறித்த நேரத்தில் படத்தை ரிலீஸ் செய்ய இயலவில்லையே என வேதனைப்படுகிறேன். மன்னிக்கவும். இன்று '100' திரைப்படம் வெளியாகாது. எனது வேலை முடிந்துவிட்டது. எனது அடுத்த படமான 'கூர்கா'வுக்குச் செல்கிறேன்” என்றார்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

'100' படத்துக்குப் பிறகு யோகி பாபு நடிப்பில் தொடங்கப்பட்ட 'கூர்கா' படத்தின் படப்பிடிப்பும் முழுமையாக முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. இம்மாத இறுதியில் அல்லது ஜூன் முதல் வாரத்தில் 'கூர்கா' படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.