avathara vettai

சமூகத்தில் தடுக்க முடியாத குற்றங்களில் ஒன்றான குழந்தை கடத்தலை கருவாக கொண்டு விறுவிறுப்பாக திரைக்கதையில் உருவாகியுள்ள படம் 'அவதார வேட்டை'. நாயகனாக வி.ஆர்.விநாயக் நடிக்க, நாயகியாக மீரா நாயர் நடிக்கும் இப்படத்தில் ராதாரவி, பவர் ஸ்டார் சீனிவாசன், ரியாஸ் கான், சோனா, மகாநதி சங்கர் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பல விளம்பரப் படங்களை இயக்கியுள்ள அறிமுக இயக்குனர் ஸ்டார் குஞ்சுமோன் இயக்கியுள்ள இப்படம் குறித்து அவர் பேசும்போது...

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

"அவதார வேட்டை' கதை கற்பனையில்ல, ஓர் உண்மை சம்பவம். இப்பொழுதெல்லாம் குழந்தையை கடத்துவது சாதரணமாகிவிட்டது. தெருவிலோ, ரோட்டிலோ தனியாக இருக்கின்ற குழைந்தைகளை கடத்துவதை தான் நாம் தினமும் நாளிதழில் படித்திருக்கிறோம். இந்த உண்மை சம்பவ திருடர்கள் எப்படி குழந்தையை கடத்துகிறார்கள் என்றால், ஒரு வீட்டில் எத்தனை குழந்தைகள் இருக்கிறார்கள், வீட்டில் இருப்பது ஆண் குழந்தையா, பெண் குழந்தையா என்பதை தெரிந்துக்கொள்ள குறியீடு வைத்து குழந்தையை திருடுகிறார்கள். இப்படி திட்டம் போட்டு குழந்தைகளை திருடும் திருடர்களை எப்படி ஹீரோ கண்டுப்பிடிக்கிறார் என்பதை காதல், ஆக்ஷனுடன் த்ரிலிங்காகவும் 'அவதார வேட்டை' இருக்கும் என்றார்.