rathnakumar

Advertisment

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பலரும் இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று ட்விட்டரில் ஹேஸ்டேக் ட்ரெட்ண்ட் செய்து வருகின்றனர். பல பிரபலங்களும் இதுகுறித்து தங்களின் கருத்தைப் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இதுகுறித்து மேயாத மான், ஆடை உள்ளிட்ட படங்களை இயக்கிய ரத்னகுமார் கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

“அந்தக் குழந்த முகக் கவசம்லாம் போட்டுட்டு சிரிச்சி பேசி விளையாடிட்டு இருந்திருக்கா டா... டேய் கெடுத்து கொன்னுட்டீங்களே டா. இப்படி ஒரு கேடு கெட்ட உலகத்துல நான் ரெண்டு பெண் குழந்தைய பெத்து போட்டத நெனச்சாலே நெஞ்சு பதறுது” என்று மிகவும் எமோஷனலாக பதிவிட்டுள்ளார்.