கரோனாவால் தேசிய ஊரடங்கு அமலில்உள்ளது. இதனால் பிழைப்பிற்காக புலம் பெயர்ந்து தொழில் பார்க்க வந்தவட இந்தியதொழிலார்கள்தங்க இடமும், சாப்பிட உணவும் இன்றி வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இதனால் தங்களின் சொந்த ஊருக்குநடந்தேயாவது சென்றுவிடலாம் என்று எண்ணி நெடுஞ்சாலைகளில் கூட்டம் கூட்டமாக நடந்தே செல்கின்றனர்.
இந்நிலையில், இன்று உ.பி. மாநிலம், அவ்ரையாமாவட்டத்தின் வழியேபுலம்பெயர் தொழிலாளர்களை ஏற்றி சென்ற லாரி, மற்றொரு லாரியுடன் மோதிய விபத்தில் தொழிலாளர்கள் 24 பேர் பலியாகியுள்ளனர்.10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து புகைப்படங்கள் மற்றும் தகவல்களைசமூக வலைத்தளத்தில் பரவி வருகின்றன.
இதுகுறித்துஇயக்குனர் பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில், ''பெரும் துயரம். உழைக்கும் மக்களின் உயிர் தின்று பெருகும் நிர்வாக திறனற்ற அரசே, உனது அழிவு வெகு தூரத்தில் இல்லை !!!'' என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.