Advertisment

‘தி ஃபேமிலி மேன்-2’ பட சர்ச்சை! ‘ராட்சசன்’ இயக்குநர் கண்டனம்!

nfnfnf

Advertisment

கரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் ஓடிடி கலாச்சாரம் தலைதூக்கியுள்ளது. திரையரங்கில் வெளியாகும் படங்களுக்கு தணிக்கை போன்ற பிரச்சினைகள் உள்ளன. ஆனால், ஓடிடியில் வெளியாகும் படங்களுக்கு அப்படியில்லாமல் நாம் நினைத்ததைப் படமாக்கி வெளியிட முடியும். இதனாலேயே இதற்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இதன் காரணமாக ஓடிடியில் பெரும்பாலும் சர்ச்சைக்குரிய படங்களே அதிகளவில் வெளியாகி வரவேற்பை பெறுகின்றன. அந்த வகையில் நடிகை சமந்தா நடித்துள்ள ‘தி ஃபேமிலி மேன்-2’ என்ற சர்ச்சைக்குரிய வெப் தொடர் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியானது.

Advertisment

dbgdbdb

அதில் சமந்தா தமிழீழப் போராளியாக நடித்துள்ளார். இது தற்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. மேலும், இந்தப் படத்துக்குப் பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்ற நிலையில், இப்படம் குறித்து 'ராட்சசன்' பட இயக்குநர் ராம் குமார் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில்... "தமிழ் போராளிகளின் போராட்டங்கள், சித்தாந்தங்கள் பற்றி முழுமையாக அறிந்துகொள்ளாமலும், அவர்களால் இப்பவும் எந்த நேரத்திலும் ஆபத்து என்பது போலவும் போராளிகள் பற்றிய ஒரு பொது புத்தியில் எடுக்கப்பட்ட வெப் தொடர் 'தி பேமிலி மேன் - 2' வெப் தொடர். #FamilyMan2AgainstTamils" என பதிவிட்டுள்ளார்.

Ramkumar the familyman2
இதையும் படியுங்கள்
Subscribe