Advertisment

இயக்குநர் ராமின் அடுத்த பட படப்பிடிப்பு தொடக்கம்!

nivin pauly

Advertisment

‘கற்றது தமிழ்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிய ராம், ‘தங்கமீன்கள்’, ‘தரமணி’, ‘பேரன்பு’ என அடுத்தடுத்து நல்ல கதையம்சம் கொண்ட வெற்றிப்படங்களை இயக்கி, தமிழின் முன்னணி இயக்குநர் அந்தஸ்திற்கு உயர்ந்துள்ளார். இவர், அடுத்தாக நிவின் பாலியை வைத்து படம் இயக்கவுள்ளதாகவும் அப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்க உள்ளதாகவும் சமீபத்தில் அறிவிப்பு வெளியாகியிருந்தது.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று (04.10.2021) பூஜையுடன் தொடங்கியுள்ளது. இப்படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்க, யுவன் இசையமைக்கிறார். தனுஷ்கோடியில் நடைபெற்ற பூஜை நிகழ்வில் நிவின் பாலி, இயக்குநர் ராம், அஞ்சலி, சுரேஷ் காமாட்சி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

director ram
இதையும் படியுங்கள்
Subscribe