/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/M2_2.jpg)
டிஸ்னி +ஹாட்ஸ்டார் இயக்குநர் ராமுடன் இணைந்து, அவரது அடுத்த படமான "பறந்து போ" படத்தை வழங்குகிறது !!
மிர்ச்சி சிவா நடிப்பில், கலக்கல் காமெடி ஜானரில் உருவாகியுள்ள படம் ‘பறந்து போ’. இப்படம் ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இப்படத்தை இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி +ஹாட்ஸ்டார், இயக்குநர் ராமுடன் இணைந்துள்ளது.
நடிகர் மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி மற்றும் மாஸ்டர் மிதுல் ரியான் ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடித்துள்ள இந்தத் திரைப்படம், மனதை இலகுவாக்கும் நகைச்சுவையுடன், மியூசிக்கல் காமெடிப் படமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டிஸ்னி + ஹாட்ஸ்டார் சோஷியல் மீடியா தளங்களில் வெளியிடப்பட்டு, வரவேற்பைப் பெற்றுள்ளது.
ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு 'பறந்து போ' திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது குறித்து இயக்குநர் ராம் பேசுகையில், ‘பேரன்பு' மற்றும் 'ஏழு கடல் ஏழு மலை' ஆகிய படங்களுக்குப் பிறகு, இந்தப் படத்தின் பிரீமியர் ரோட்டர்டாம் திரைப்பட விழாவில் அரங்கேறியதைக் காண்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். சர்வதேச திரைப்பட விழாவான ரோட்டர்டாம் இல் 'ஏழு கடல் ஏழு மலை' திரையிடப்பட்டபோது, 'பறந்து போ' திரையிடப்படுமா என்றும், ரோட்டர்டாமுக்கு வருவோமா? என்றும் மிதுல் ரியான் கேட்டார். ஒரு வருடம் கழித்து அவருடைய ஆசை நிறைவேறியதில் மகிழ்ச்சி அடைகிறேன். சிவாவும் நானும் வரும் பிப்ரவரி 4, இரவு 8 மணிக்கு நடக்கும் பிரீமியரில் கலந்து கொள்கிறோம் .
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)