சித்தார்த் நடிப்பில் '8 தோட்டாக்கள்' பட இயக்குநர் ஸ்ரீ இயக்கத்தில் தயாரிப்பாளர் அருண் விஸ்வா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘3 பிஹெச்கே’(3 BHK). இப்படத்தில் சரத்குமார், தேவயானி, மீத்தா ரகுநாத், கன்னட நடிகை சைத்ரா அச்சார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கு பிரபல பாடகி பாம்பே ஜெயஸ்ரீயின் மகன் அம்ரித் ராம்நாத் இசையமைத்துள்ளார்.
இந்த படம் ஜூலை 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. நிகழ்வில் படக்குழுவினருடன் இயக்குநர் ராம், ரவி மோகன், மாரி செல்வராஜ் உள்ளிட்ட பல்வேறு திரை பிரபலங்கள் கலந்து கொண்டு பேசினர். அந்த வகையில் இயக்குநர் ராம் நிகழ்வில் பேசியதாவது, “இந்தப் படத்தின் தயாரிப்பாளர் அருண் விஸ்வா எனது அசிஸ்டெண்ட்டாக இருந்தார். ‘தங்க மீன்கள்’ எடுத்த சமயத்தில் அருண் என்னிடம் வந்தார். அவர் வந்ததும் எங்களுக்கு நம்பிக்கை வந்தது. ‘தங்க மீன்கள்’ வெளியாகுமா இல்லையா என்று இருந்த சமயத்தில் பலரும் என்னை விட்டு போனாலும் அருண் என்னுடன் தொடர்ந்து பயணித்தார். அவர் மூலமாகத்தான் கோடம்பாக்கத்தில் பலருடைய அறிமுகம் எனக்குக் கிடைத்தது. அவரைப் பார்த்தாலே எனக்கு உற்சாகம் பிறக்கும். அவருக்கு ஆல் தி பெஸ்ட்! தமிழில் முக்கிய படங்களைத் தயாரிப்பது மட்டுமல்லாது இயக்கவும் செய்வார் அருண்.
கற்றது தமிழ் ரிலீஸான பிறகு என்னிடம் பேச நினைத்த ஒரே ஹீரோ சித்தார்த். அவரை மிகவும் அகங்காரமானவர், எதிராளியின் மனதைப் பார்க்காமல் பேசி விடுபவர் என்ற பிம்பம் எல்லோரிடமும் இருக்கிறது. ஆனால், அவர் ஒரு அடி முட்டாள். எந்த அர்த்தத்தில் சொல்கிறேன் என்றால், அவர் ஒரு வளர்ந்த குழந்தை. நானும் அவரும் ஒரே ஸ்கூலில் படித்தோம். இன்னும் அதை விட்டு அவர் வெளியே வரவில்லை. எதை எப்போது செய்ய வேண்டும் எனத் தெரியாது, அதன் பின் விளைவுகளை பற்றி யோசிப்பதில்லை, அந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் எனத் தோன்றுகிறதோ அதை செய்துவிட்டு போகும் ஒரு இயல்பான மனிதர். அவர் குழந்தையாகவே இருக்க வேண்டும். அவர் எனக்கு ஒரு இன்ஸ்பிரேஷன்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/06/27/48-2025-06-27-18-29-59.jpg)