director rajmohan about actress abhirami

ரோமியோ பிக்சர்ஸ் சார்பில்யூட்யூப் புகழ் இயக்குநர் ராஜ்மோகனின் அறிமுக இயக்கத்தில், பள்ளிக் குழந்தைகளின் வாழ்வை மையப்படுத்தி உருவாகி வரும் திரைப்படம் 'பாபா பிளாக்‌ ஷீப்'. இப்படத்தின் மூலம் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் திரையில் தோன்றியுள்ளார் விருமாண்டி புகழ் நடிகை அபிராமி. இப்படத்தில் மதுரை முத்து, ஆர்.ஜே. விக்னேஷ்காந்த், சுப்பு பஞ்சு, சுரேஷ் சக்ரவர்த்தி, போஸ் வெங்கட் போன்ற பல நடிகர்களும் நடித்துள்ளார்கள்.

Advertisment

இது குறித்து இயக்குநர் ராஜ்மோகன் கூறியதாவது, “பாபா பிளாக்‌ ஷீப் பள்ளிக் குழந்தைகளின் வாழ்வை சொல்லும் ஒரு அழகான டிராமா. இப்படத்தில் ஒரு குழந்தையை பிரசவம் முதல் பள்ளிக்கூடம் வரை சுமக்கும் அன்னை கதாபாத்திரம் இருந்தது. இப்பாத்திரத்திற்காக நடிகை அபிராமி அவர்களை அணுகினேன்.கதையை கேட்டவுடன் அவருக்கு மிகவும் பிடித்துநான் நடிக்கிறேன் என்றார்.

Advertisment

மிகவும் உணரச்சிகரமான ஒரு காட்சியில் அவரது நடிப்பை பார்த்துமொத்த படக்குழுவும் கண் கலங்கி எழுந்து கை தட்டியது. அந்த காட்சியை ரசிகர்கள் திரையில் பார்க்கும் போது, கண்டிப்பாக அவர்களும் கண் கலங்குவார்கள். இப்படம் நடிகை அபிராமிக்கு மீண்டும் திரையில் ஒரு திருப்புமுனை படமாக இருக்கும். படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டோம்" என்றார். மேலும் படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் தற்போது நடந்து வருவதாகவும் விரைவில் டீசர் வெளியாகும் எனவும் தெரிவித்தார்.