jeeva

'சிவா மனசுல சக்தி' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியவர் இயக்குனர் ராஜேஷ். நடிகர் ஜீவா, அனுயா பகவத், சந்தானம் நடித்து வெளியான இப்படம் பட்டிதொட்டியெங்கும் வசூலை வாரிக் குவித்தது. இப்படத்தில் இடம்பெற்றிருந்த நகைச்சுவை காட்சிகளுக்கு கிடைத்த வரவேற்பையடுத்து, மக்கள் குடும்பம் குடும்பமாக தியேட்டர்களை நோக்கி வரத்தொடங்கினர்.

Advertisment

இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குனர் ராஜேஷிற்கு அடுத்தடுத்து படம் இயக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. இந்த நிலையில், ராஜேஷ் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த சில படங்கள் தோல்வியைத் தழுவியதால், வெற்றிப்பாதைக்கு திரும்பும் முயற்சியில் ராஜேஷ் உள்ளதாகவும் அதற்காக நடிகர் ஜீவாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

ராஜேஷ் கூறிய கதை நடிகர் ஜீவாவிற்கு பிடித்துப் போக, அவரும் சம்மதம் தெரிவித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. எனவே, அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்கின்றனர் நமக்கு நெருங்கிய சினிமா வட்டாரங்கள்.

இதனையடுத்து, இக்கூட்டணி மீண்டும் இணைந்தால் சந்தானம் நகைச்சுவை கதாபாத்திரம் ஏற்று நடிக்க வேண்டும் என ரசிகர்கள் தங்களது எதிர்பார்ப்பை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

Advertisment