/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/76_5.jpg)
'சிவா மனசுல சக்தி' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியவர் இயக்குனர் ராஜேஷ். அவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம்'மிஸ்டர் லோக்கல்'. சிவகார்த்திகேயன் நடித்திருந்த இப்படம், வணிக ரீதியில் பின்னடைவைச் சந்தித்தது. இதனையடுத்து, நடிகர் ஜீவாவை வைத்துப் படம் இயக்கும் முயற்சியில், இயக்குனர் ராஜேஷ் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. நடிகர் ஜீவாவும், இயக்குனர் ராஜேஷ் கூறிய கதைக்குச் சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவுப்பு வெளியாகும் எனவும்கூறப்பட்டது.
இந்த நிலையில், நடிகர் ஜி.வி.பிரகாஷோடு இயக்குனர் ராஜேஷ் இணையவுள்ளதாகத் தற்போதைய தகவல்கள் கூறுகின்றன. நடிகர் ஜீவா,வேறு சில படங்களில் நடித்துக் கொண்டிருப்பதால், ஜி.வி.பிரகாஷிடம் கூறிய கதையை முதலில் படமாக்க ராஜேஷ் முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படம்,குடும்பப் பின்னணியும் ராஜேஷின் வழக்கமான நகைச்சுவை பாணியும் கலந்த படமாகத் தயாராவுள்ளது. மேலும், அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் இப்படத்தின் பணிகள் முழுவீச்சில் தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இயக்குனர் ராஜேஷ் மற்றும் ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் 'கடவுள் இருக்கான் குமாரு' என்ற திரைப்படம் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியானது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)