ps mithran

Advertisment

'இரும்புத்திரை' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து'ஹீரோ' என்று சூப்பர் ஹீரோ படம் ஒன்றை இயக்கினார் மித்ரான். தற்போது கார்த்தியை வைத்து படம் இயக்க இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தப் படத்தை ப்ரின்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், இயக்குனர் மித்ரன் பெயரை பயன்படுத்தி பரவும் ஒரு மோசடி குறித்து ட்விட்டரில் பகிர்ந்து ரசிகர்களை எச்சரித்துள்ளார், மித்ரன்.

அதுகுறித்து அவர் பதிவிடுகையில், “யாரோ ஒருவர் என்னுடைய நண்பர் என்று கூறிக்கொண்டு மக்களிடம் நடிகர்கள் தேர்வுக்காகத் தொடர்பு எண்களைக் கேட்பதாக என்னுடைய கவனத்துக்கு வந்துள்ளது. இந்த நபரை எனக்குத் தெரியாது. பிறரிடமிருந்து தொடர்பு எண்/ புகைப்படங்களைச் சேகரிக்கும் அதிகாரத்தையும் நான் யாருக்கும் வழங்கவில்லை. இதுபோன்ற மெயில் உங்களுக்கு வந்தால் தயவுசெய்து புகார் செய்யுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisment