Advertisment

'விட்ராதீங்க' தமிழ்நாடு முதல்வருக்கு இயக்குநர் பேரரசு வேண்டுகோள்  

director perarasu request to tn cm stalin

தமிழ்நாட்டில் சில வாரங்களாக பள்ளிகளில் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு பள்ளி மாணவிகள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இது தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், "பெண் குழந்தைகள் யாருக்கேனும் பாதிப்பு ஏற்பட்டால் 1098 எண்ணுக்கு அழைத்துக் கூறுங்கள். பாதிக்கப்படுபவர்களின் ரகசியம் காக்கப்பட்டு,விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். முதலமைச்சராக மட்டுமின்றி ஒரு தந்தையாகவும் உங்களைக் காக்கும் பொறுப்பு எனக்கு உள்ளது. தயவுசெய்து குழந்தைகள் யாரும் தற்கொலை செய்துகொள்ளவேண்டாம்." எனதெரிவித்திருந்தார்.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="cbee518c-dee9-4fd8-a571-5257b27f72e7" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/article-inside-ad_68.jpg" />

Advertisment

இந்நிலையில், இயக்குநர் பேரரசு முதல்வர் ஸ்டாலினுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “இதயப்பூர்வ நன்றி முதல்வரே. உங்கள் உணர்வோடு அதிகாரிகளும் ஒன்றி செயல்பட்டால் நிச்சயம் பாலியல் பயங்கரவாதத்திலிருந்து பெண்ணினம் காக்கப்படும். 1098 இந்த எண் மகளிர் காக்கும் மந்திரமாக இருக்கட்டும். நன்றி! நன்றி!! நன்றி. விட்ராதிங்க முதல்வரே” எனக் குறிப்பிட்டுள்ளார்.

directorperarasu Chief Minister of Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe